மதுரையில் உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் நடத்தப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. ஏராளமானவர்கள் ஒரே இடத்தில் திரண்டதால் தள்ளு-முள்ளு.. !!

0 12509

மதுரையில் உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் நடத்தப்பட்ட வாவ் மதுரை என்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

மாநகராட்சி ஏற்பாட்டின் படி நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் சூரி பங்கேற்ற நிலையில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வருவதற்கு தாமதமானதால் காலை 7 மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கியது.

ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடியதால் நெருக்கடி ஏற்படவே, கூட்டத்தில் சிக்கியவர்கள் வெளியேறக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.

பிரபலங்கள் பேசி முடித்ததும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து கூட்டத்தினர் ஏமாற்றத்துடன் கலைந்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments