கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் மோதல்

0 921

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களுக்கும் இன்று காலை மோதல் ஏற்பட்டது.

2300-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் உள்ளதா என காவலர்கள் சோதனை நடத்தச் சென்றனர்.

அப்போது, இரண்டாவது ப்ளாக்கில் உள்ள கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில், காயமடைந்த 4 காவலர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தங்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரவில்லை என்று சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி கைதிகள் போராட்டம் நடத்தினர். சிலர், பிளேடால் கைகளில் கீறிக்கொண்டனர்.

அவர்களை காவலர்கள் சமாதானப்படுத்தி முதலுதவி அளித்தனர். மோதல் குறித்து கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments