அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வந்து, பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண்
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வந்து, பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறநோயாளிகள் பிரிவிற்கு வந்த பெண், அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டே குழந்தையை தூங்க வைத்து மேஜையின் மேல் வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அடுக்கம்பாறை மருத்துவமனையில் தனக்கு பிறந்த குழந்தைக்கு மஞ்சள்காமாலை உள்ளதால், சிகிச்சைக்கு வந்ததாக அவர் தெரிவித்த தகவலும் பொய்யானது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments