இந்த மூஞ்சி தானே உள்ளே பெண்களை எட்டிப்பார்த்தது...? இந்தா மிளகாய்த்தூள் ட்ரீட் மெண்ட்..! அலரியபடியே ஓடிய புள்ளீங்கோ

0 2670
இந்த மூஞ்சி தானே உள்ளே பெண்களை எட்டிப்பார்த்தது...? இந்தா மிளகாய்த்தூள் ட்ரீட் மெண்ட்..! அலரியபடியே ஓடிய புள்ளீங்கோ

ஈரோடு பேருந்து நிலையத்தில் மகளிர் கழிவறைக்குள் புகுந்த புள்ளிங்கோ இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பெண் ஒருவர், அந்த இளைஞரின் தலைமுடியை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூளை பூசி விரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

மது போதையில் மகளிர் கழிவறைக்குள் புகுந்த ஆசாமியின் தலைமுடியை பிடித்து பெண் ஒருவர் முறைவாசல் செய்யும் காட்சிகள் தான் இவை ..!

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவன், இருட்டுக்குள் நின்று பெண்களை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனை கண்டு ஒரு இளம் பெண் கூட்டலிட்ட நிலையில் தப்பி ஓட முயன்ற ஒட்டடை துடைப்பம் ஹேர்ஸ்டைல் இளைஞரை அங்கு சோளம் விற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் அவனை மடக்கிப்பிடித்தார். அவனது தலை முடியை கொத்தாக பிடித்து பயணிகளுடன் சேர்ந்து நையப்புடைத்தார்

உன்னோட அம்மா, தங்கச்சியும் ஒரு பெண் தானே இப்படி செய்வியா ? எனக்கேட்டு அவனுக்கு தர்ம அடிகொடுக்கப்பட்ட நிலையில் , மற்றொரு பெண்ணிடம் இருந்து கையில் மிளகாய் பொடியை வாங்கிய அந்தப் பெண், உன்னைய அடிச்சி விரட்டுறத விட இதுதான் பெரிய தண்டனை என்று அந்த மிளகாய் பொடியை இளைஞரின் முகத்தில் பூசி விட்டார்

மிளகாய் பொடி பூசப்பட்டதால், முகத்தில் எரிச்சல் தாங்க இயலாமல் அலறியபடியே அங்குமிங்கும் ஓடத்தொடங்கினார் அந்த சேட்டை இளைஞர்

பேருந்து நிலையத்தில் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவர் அந்த இளைஞரை பிடித்து பேருந்து நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

போதையில் இருந்த இளைஞரை காவல் நிலையத்தில் படுக்க வைத்த போலீசாரோ, அந்த இளைஞரிடம் ஊர் பெயர் விவரம் எதுவும் கேட்காமல், சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் அந்த இளைஞரை விடுவித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்கள் கழிவரை பகுதியில் போதிய வெளிச்சம் உள்ள விளக்குகளை எரியவிடவும், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments