கார் ஓட்டும் பயிற்சியின் போது கார் ஆற்றில் மூழ்கி சிதம்பரம் நகை கடை உரிமையாளரின் மனைவி பலி

0 4579

கடலூர் மாவட்டத்தில் கார் ஓட்ட பயிற்சி பெற்ற போது கார் ஆற்றில் மூழ்கியதில் நகைக்கடை உரிமையாளர் மனைவி பலியானார்.

சிதம்பரத்தைச் சேர்ந்த நகைகடை உரிமையாளர் மகேஷ்குமார் மனைவி சுபாங்கிக்கு, அவரது தம்பி நாம்தேவ், அருகிலுள்ள பிச்சாவரம் பகுதியில் கார் ஓட்ட பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆற்றின் பாலத்தை கடப்பதற்காக வலது புறம் திரும்புவதற்கு பதிலா இடது புறம் திரும்பியபோது கார் ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே வந்த நாம்தேவ் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய காரில் இருந்து சுபாங்கியை மீட்டு சிதம்பரம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்த அண்ணாமலை நகர் போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments