இந்தியாவா பாரதமா? பெயர் மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்? - பொறுத்திருந்து பாருங்கள் என்று மத்திய அரசுத் தரப்பில் பதில்

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், அதிகாரிகள் தங்கள் அழைப்பிதழ்களில் இந்தியா என்றும் பாரதம் என்றும் இரண்டு பெயர்களையும் பயன்படுத்தலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பெயரை காலனியாதிக்கப் பெயரான இந்தியாவை விடுத்து, பாரதம் என்று அழைப்பதை மத்திய அரசு முன்மொழிந்துள்ளதைத் தொடர்ந்து இது குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் அனுமதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.
Comments