ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இந்தியாவில் இடமில்லை - பிரதமர் மோடி

0 1020

ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இந்தியாவில் இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ள பிரதமர் மோடி, 2047-ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு பிடிஐ நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ள பிரதமர், இந்தியாவின் முன்னேற்றம் எதிர்பாராத விபத்து அல்ல என்றும், செயல்சார்ந்த தொடர் திட்டங்களின் விளைவு என்றும் கூறினார்.

உலகளாவிய பணவீக்கம் மற்றும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண ஜி 20 மாநாட்டில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

சீனா மற்றும் பாகிஸ்தானின் எதிர்ப்புகளை நிராகரித்து, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஜி20 கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவிடம் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவற்றுடன் வளர்ச்சியும் சேர்ந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments