ஜி20 உச்சி மாநாட்டைத் தவிர்க்க சீன அதிபர் ஷி ஜின்பிங் முடிவு..!

இந்தியாவுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்க்க சீன அதிபர் ஷி ஜின்பிங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன அதிபருக்குப் பதில் அந்நாட்டின் பிரதமர் லீ கியாங் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கண்டிக்கும் வரைவு முன்மொழிவுகளை சீனா விரும்பாததாலும், உலக அளவில் சீனாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாலும் மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
Comments