வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா ஆண்டுப்பெருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் குவிப்பு

0 1432

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆண்டுப்பெருவிழாவை முன்னிட்டு இன்று மாலை நடைபெறும் கொடியேற்றத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மெட்டல் டிடெக்டர் உதவியுடன் உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பிறகே பக்தர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

20-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு  கோபுரங்கள் அமைக்கப்பட்டு 60 இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டு, 4 ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

கொடியேற்றத்தை ஒட்டி, அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இன்றுமுதல் வரும் 8-ம் தேதிவரை வேளாங்கண்ணி கடற்கரையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments