"தமிழக அரசு மீது நிறுவனங்கள் வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

0 666

தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள், அரசு மீது வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சரக்கு போக்குவரத்து மற்றும் வினியோக மேலாண்மை நிறுவனமான யு.பி.எஸ்.ஸின் தொழில்நுட்ப மையத்தை சென்னை போரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாணவர்கள், யுபிஎஸ் நிறுவனத்தில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்கான கடிதங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். மாநிலத்தின் பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பபடுவதாக முதலமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments