ஹெல்மெட் அணியாமல் சென்று போலீசில் சிக்கிய 18 வயது இளைஞருக்கு ரூ.8000, அவரது பெற்றோருக்கு ரூ.5000 அபராதம்.. !!

0 914

நாகர்கோவிலில் பைக் சாகசம் செய்து அதனை ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் போக்குவரத்து போலீசிடம் சிக்கிய நிலையில், அவருக்கும் அவரது பெற்றோருக்கும் சேர்த்து 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான அந்த இளைஞர் ஹெல்மெட் அணியாமலும் உரிமம் இல்லாமலும் பைக்கில் சென்று போலீசிடம் சிக்கினார்.

போலீசார் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது பைக் சாகசங்கள் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இளைஞருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் உரிமம் பெறாத மகனுக்கு பைக் வாங்கிக் கொடுத்ததாக அவரது பெற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் போலீசார் விதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments