வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது NP5 விமானத்தின் முதல் ஓட்டம் - ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி

0 3600

இந்திய கடற்படைக்கு பயன்படும் வகையில் NP5 இலகு ரக விமானத்தின் புரோட்டோடைப் எனப்படும் மாதிரி வடிவத்தின் முதல் ஓட்டம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டதாக ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி கூறியுள்ளது.

இந்த விமானம் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் விமானநிலையத்தில் பறக்கத் தொடங்கியதாகவும், தொடர்ந்து 57 நிமிடங்கள் வெற்றிகரமாகப் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து NP5 விமானம் விரைவில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கிக் கப்பல்களில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும்  ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments