கொட்டித் தீர்த்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் 10000 கோடி ரூபாய் இழப்பு -முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு

0 898

கொட்டித் தீர்த்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.

கங்க்ராவில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அவர், மாநிலத்தில் சேதமடைந்துள்ள உள்கட்டமைப்புகளை சரி செய்ய ஓராண்டு காலம் ஆகலாம் என கூறினார்.

இதனிடையே சிம்லாவின் சம்மர் ஹில், கிருஷ்ணா நகர், ஃபாக்லி ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 20-க்கும் மேற்பட்டோரில், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இமாச்சலில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்கள், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 60-ஐ தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments