இந்தியா, சீன எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்னைகளை விரைவில் தீர்க்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல்

0 1113

இந்தியா, சீன எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்னைகளை விரைவில் தீர்க்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான 19வது சுற்றுக் கூட்டம், சுஷுல் - மோல்டோ எல்லை சந்திப்பில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பு அதிகாரிகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்து இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்லையில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க, பேச்சுவார்த்தையின் வேகத்தை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எல்லைப் பகுதியில் இடைக்காலமாக அமைதியை நிலைநாட்ட இருதரப்பும் ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு நாட்கள் நடைபெற்றதாகவும் வெளியுறவுத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments