மின்கம்பத்தில் இரும்புக்கம்பியைக் கட்டி துணி உலர்த்தி வந்த குடும்பத்தினர்.. மின்சாரம் தாக்கி தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு.. !!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
ஒடச்சகரை கிராமத்தில் மாது என்பவரின் வீட்டிற்கு அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. அதில் இரும்பு கம்பி ஒன்றை கட்டி துணி உலர்த்துவதற்காக மாது பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
அப்பகுதியில் வியாழன் இரவு பெய்த கன மழையால் துணிக் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அந்த கம்பியை மீண்டும் கம்பத்தில் கட்டுவதற்காக மாதுவின் மனைவி மாதம்மாள் கையில் எடுத்துள்ளார்.
அப்போது கம்பியில் மின்சாரம் பாய்ந்து மாதம்மாள் அலறியதை அடுத்து, அவரைக் காப்பாற்ற வந்த அவரது மகன் மற்றும் உறவுப் பெண் ஒருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் 3 பேரும் உயிரிழந்தனர். மின் கம்பத்தில் பொருத்தப்பட்ட தெருவிளக்கில் இருந்து கசிந்த மின்சாரம் துணி உலர்த்த கட்டப்பட்ட கம்பியில் பாய்ந்ததே விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments