இந்தியாவின் ஆன்மீக தலைநகர் தமிழ்நாடு - ஆளுநர் ஆர்.என்.ரவி

0 1224
இந்தியாவின் ஆன்மீக தலைநகர் தமிழ்நாடு - ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவிலேயே ஆன்மீக தலைநகரமாக விளங்குவது தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

திருவண்ணாமலையில், கிரிவல பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடன் ஓர் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், பல நாடுகள் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை என்றார். ஆனால் இந்தியா ஆன்மீக சக்தியால் உருவாக்கப்பட்டது என்று ஆர்.என்.ரவி கூறினார்.

கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று ஆர்.என்.ரவி உறுதியளித்தார். ரிஷிகளும், நாயன்மார்களும் தமிழகத்தில் அவதரித்து, தாங்கள் யார் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியிருப்பதாக ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments