தாய்லாந்து சுற்றுலா.. படுக்கையறையில் சடலமான பிரபல நடிகரின் மனைவி..!

0 61081

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிரபல நடிகரின் 44 வயது மனைவி படுக்கையறையில் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

பிரபல கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா. 44 வயதான ஸ்பந்தனா சில தினங்களுக்கு தனது குடும்பத்துடன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் திங்கட்கிழமை படுக்கையில் இருந்து நீண்ட நேரம் எழுந்திருக்காமல் படுத்த படுக்கையாக கிடந்தார். அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்பந்தனா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த நடிகர் விஜயராகவேந்திராவின் சகோதரர் முரளி, படுக்கை அறையில் மூர்ச்சையாகி கிடந்த ஸ்பந்தனா மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், அவரது சடலத்தை இந்தியா கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

ஸ்பந்தனாவின் மறைவிற்கு கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்பந்தனாவின் தந்தை முன்னாள் காவல் உயர் அதிகாரி என்றும் நடிகர் விஜய் ராகவேந்திரா மறைந்த பழம் பெரும் நடிகர் ராஜ்குமாரின் பேரன் என்றும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் கர்நாடக மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments