மக்களவைத் தேர்தலில் போட்டியிட வயது வரம்பை 18 ஆகக் குறைக்க திட்டம்.. மத்திய தேர்தல் ஆணையத்தின் கருத்து என்ன..?

0 973

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 25 ல் இருந்து 18 ஆகக் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு செய்த பரிந்துரையை ஏற்க மறுத்தது மத்திய தேர்தல் ஆணையம்.

பாஜக எம்பி சுஷில் குமார் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு தேர்தல்கள் குறித்த சில பரிந்துரைகளை நேற்று வெளியிட்டுள்ளது. தேர்தல்களில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் உள்ள தேர்தல் முறைகளை ஆய்வு செய்தபின்னர் தேர்தலுக்கான வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதாக இக்குழுவினர் வெளயிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இந்தியத் தேர்தல் ஆணையம் முரண்பட்டுள்ளது.மிகப் பெரிய பொறுப்புள்ள பதவிகளில் அமர்வதற்கான எந்தவித அனுபவமோ முதிர்ச்சியோ 18 வயதில் இருக்காது என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments