திமுக அரசு 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை : அண்ணாமலை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மண்ணை சுரண்டி எடுத்ததால், தண்ணீரின்றி விவசாயிகள் கஷ்டப்படும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது தண்ணீராக கரைபுரண்டு ஓடுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மானாமதுரை புறவழிச்சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் இருந்து 5வது நாள் பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, நகராட்சி அலுவலகம் அருகே பேசும் போது இதனை தெரிவித்தார்.
மத்திய அரசு இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள திமுக அரசு 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு கூட அரசு வேலை வழங்கவில்லை என சாடினார்.
பட்டியல் இன மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய 3000 கோடி ரூபாய் நிதியை, மகளிர் உரிமை திட்டத்திற்கு மாற்றி பித்தலாட்டம் நடைபெற்றுள்ளது என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
Comments