என்.எல்.சி. போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது... 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும், 26 பேர் கடலூர் மத்திய சிறையிலும் அடைப்பு...!

என்.எல்.சி. விரிவாக்க பணிக்கு எதிராக நெய்வேலியில் பா.ம.க.வினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி. வாயில் முன் நேற்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின்போது கல்வீச்சு, போலீசார் வாகனங்கள் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்தேறின.
இது தொடர்பாக, கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 பேர் கடலூர் மத்திய சிறையிலும், 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவின் அடிப்படையில் எஞ்சியவர்களை கைது செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு கடலூர் வளையமாதேவியில், பரவனாறு வடிகால்வாய் தோண்டும் பணிகளை என்.எல்.சி மீண்டும் தொடங்கியுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஏ.டி.எஸ்.பி. அசோக் குமார் தலைமையில் பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments