பெங்களூருவில் ஜூலை 27ம் தேதி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வேலை நிறுத்தம்

பெங்களூரில் வரும் 27ம் தேதி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடாது என தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தனியார் பஸ்களில் சக்தி திட்டத்தை அமல்படுத்தவும், பெண்களுக்கான டிக்கெட் கட்டணத் தொகையை அரசு தங்களுக்கு வழங்கவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக அரசின் பெண்களுக்கான இலவச பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கும் சக்தி திட்டத்தைக் கண்டித்து பெங்களூருவில் தனியார் பேருந்துகள், சுற்றுலா நடத்துநர்கள், ஆட்டோரிக் ஷா, டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜூலை 27ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களும் சட்டவிரோத பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments