தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்தபடி பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்கள்..!

ஷென்ஜோ - 16 விண்கலம் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்கள் 2 பேர் முதல்முறையாக விண்வெளியில் நடந்தபடி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
மே மாதம் 30-ஆம் தேதி தியாங்காங் விண்வெளி நிலையத்தை சென்றடைந்த 3 விண்வெளி வீரர்களும் 6 மாதங்கள் அங்கு தங்கியபடி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அந்த குழுவைச் சேர்ந்த 2 வீரர்கள் சுமார் 8 மணிநேரம் விண்ணில் நடந்தபடி ரோபோடிக் - ஆர்ம் உதவியுடன் விண்வெளி நிலையத்தின் வெளிபுறத்தில் கேமரா பொருத்துதல் உள்பட பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். மற்றொருவரான கை ஹைச்சோ விண்கலத்தில் இருந்தபடி அவர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்துகொண்டிருந்தார்.
பெய்ஜிங் பல்கலைக்கழக பேராசிரியரான கை ஹைச்சோ சீனாவிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் முதல் சராசரி குடிமகன் ஆவார்.
Comments