அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை வலுக்கட்டாயமாக அழைத்து செல்வதாக புகார்.. !!

கள்ளக்குறிச்சி அருகே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வந்த பணியாளர்களை அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு டாட்டா ஏசி வாகனத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் 15ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பு தியாகதுருகம், உலகங்காத்தான் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டம் இல்லாததால் 100 நாள் பணியாளர்களை திமுகவினர் அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Comments