டூவிலரில் சென்ற அ.தி.மு.க. கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை....!

மதுரை அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் மர்மநபர்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், மாவூத்துபட்டியைச் சேர்ந்த சந்திரபாண்டியன் என்ற அவர், அம்மைய நாயக்கனூர் பேரூராட்சியின் 4ஆவது வார்டு உறுப்பினர் ஆவார்.
இவர் 4 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நிலையில், லிங்கவாடியில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பாலமேடு அருகே அவரை வழிமறித்த கும்பல், சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. பின்னர் தகவல் அறிந்து சென்ற பாலமேடு போலீசார், உடலைக் கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகித்துள்ள போலீசார், தலைமறைவான கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Comments