“7 தளங்கள், 60 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள்”.. ரூ. 215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு

மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்கள், சிலைகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் பார்வையிட்டார்.
ரூ. 215 கோடியில் 7 தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நூலகத்தில் மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் புத்தகங்களை படிப்பதற்காக பிரத்யேக அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது
நூலகத்தில் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர், நூலக வருகைப் பதிவேட்டில் முதல் நபராக கையெழுத்திட்டார்.
தொழிலதிபர் ஷிவ் நாடார், அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றார்.
முன்னதாக, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றடைந்த முதலமைச்சரை, விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை வரை தி.மு.க.வினர் திரண்டு வரவேற்றனர்.
Comments