சென்னையில் ரவுடியை ஓடஓட வெட்டி விட்டு தலைமறைவான 7 பேர் கொண்ட கும்பல் கைது!

0 5401

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் இருந்த ரவுடியை ஒட ஒட விரட்டி வெட்டி விட்டு தப்பியோடிய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் 6 வழக்குகள் உள்ளன. கடந்த 8 தேதி அன்று மாலை தண்டையார்பேட்டையில் மது அருந்தி கொண்டு இருந்த அவரை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மூன்று தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்களுக்கு தாக்குதல் நடத்தியவர்கள் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன் பேரில் அங்கு போலீசார் சென்ற போது கிஷோர் குமார் என்பவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சுவர் ஏறி தப்பி செல்லும் முயன்றதாக தெரிகிறது. ஆனால் அவர் கீழே விழுந்ததில் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரையும், பூபாலன், மாவு கிஷோர் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த ரவுடி ஜீவன் குமார் என்பவன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அந்த கொலைக்கு பழிவாங்குவதற்காகவே ஜீவன் குமாரின் அண்ணன் கிஷோர் குமார் தனது நண்பர்கள் மூலமாக தமிழரசனை கொலை செய்ய முயன்றதும் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments