உடன் பணியாற்றிய பெண்ணிடமே வழிப்பறி... 7 சவரன் சங்கலியைப் பறித்த வட மாநில இளைஞர் இரண்டு மணிநேரத்தில் கைது..!

சென்னை, மண்ணடியில் உடன் பணியாற்றிய பெண்ணிடமே 7 சவரன் சங்கலியைப் பறித்த வட மாநில இளைஞர் இரண்டு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை போலீசார் உடனடியாக சுற்றிவளைத்தனர். வாரணாசியைச் சேர்ந்த விபுல் குமார் மிஸ்ரா என்ற அவர், கடந்த 6 மாதமாக தனியார் எலெக்ட்ரிக் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
விரைவில் ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஊருக்குச் சென்றால் கடன்காரர்கள் தொல்லைக் கொடுப்பார்களே என்ற கவலையில் இருந்ததாகவும் விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
நண்பர்களிடம் கடன் கேட்டும் கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், உடன் பணியாற்றிய 60 வயது பெண் பணி முடிந்து செல்லும்போது லிங்கிச் செட்டி தெருவில், மர்மநபர் போல பின்னால் சென்று வழிப்பறி செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து விபுல் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
Comments