கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவி.. 18 வயது இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம்..!!

0 6364

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல், 18 வயது இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கொடுங்குளம் பகுதியை சேர்ந்த விஜின்குமார் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரை பிரிந்து பிள்ளைகளுடன் தாய் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜின்குமார் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி இளம்பெண்ணை மதபோதகர் பிரின்ஸ் என்பவரின் உதவியுடன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

தனது மகளை காணவில்லை என இளம் பெண்ணின் தாயார் அளித்த புகாரையடுத்து, முதல் மனைவியிடம் விசாரணை நடத்தியதில் இதுவரை விவாகரத்து செய்யவில்லை என்பது தெரியவந்தது.

கணவர் குறித்து, முதல் மனைவியும் புகார் அளித்த நிலையில், இளம் பெண்ணின் தாயார் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான விஜின்குமாரையும், இளம்பெண்ணையும் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் வேளாங்கண்ணியில் விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று விஜின்குமாரை கைது செய்து, இளம் பெண்ணை மீட்டனர். மத போதகரையும் போலி திருமணத்திற்கு உதவியவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments