காஞ்சிபுரத்தில் தி.மு.க. நிர்வாகி ஓடஓட வெட்டிக் கொலை...கொலைக்குப் பழி தீர்க்கும் வகையில் தாக்குதல்..!!
காஞ்சிபுரத்தில் தி.மு.க. நிர்வாகியை ஓடஓட வெட்டிக் கொன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓரிக்கையைச் சேர்ந்த பூபாலன் தி.மு.க.-வின் வட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனமும் நடத்தி வந்த அவர், செவ்வாய்க் கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
தப்ப முயன்றபோதும் துரத்திச் சென்று வெட்டியதில் பூபாலன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸார், கணேஷ் நகரைச் சேர்ந்த விக்கி என்ற மதன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், விக்கியின் அண்ணன் மோகனை 2021 ஆம் ஆண்டில் பூபாலன் தரப்பினர் கொன்றதாகவும், அதற்கு பழி தீர்க்கவே இந்த கொலை நடந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments