தனியார் பள்ளி வேன் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் பலி...!

சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே சார்லஸ் மெட்ரிக் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
சருகனேந்தல் என்ற இடத்தில் சாலை மண் புருவத்தில் இறங்கியதில் சறுக்கி, சாலையோர பள்ளத்தில் வாகனம் தலைக்குப்புற கவிழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் ஹரிவேலன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த இருபதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹரிவேலனின் தந்தை வெள்ளைச்சாமி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், வேம்பத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் தாய் கற்பகம் மகனின் இறப்பு தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளைசாமி கற்பகம் தம்பதியினருக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு பின் பிறந்த ஒரே மகன் ஹரிவேலன் என்பது குறிப்பிடதக்கது ..
Comments