பொதுவெளியில் கணவருடன் வாக்குவாதம் செய்த கருப்பின கர்ப்பிணியை சாலையில் தள்ளிவிட்டு கைது செய்த காவல் அதிகாரி...!

0 1856

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கருப்பின கர்ப்பிணி ஒருவரை காவல் அதிகாரி கீழே தள்ளி விட்டு கைது செய்த காணொலி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம், கருப்பின தம்பதியர் பொதுவெளியில் சண்டையிட்டு கொள்வதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.

அங்கு சென்ற காவல் அதிகாரி மாத்யூ, காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த கர்ப்பிணியை கீழே இறங்குமாறு கூறினார்.

தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியதை பொருட்படுத்தாமல் காரிலிருந்து வெளியே இழுத்த மாத்யூ, கைகளை முதுகிற்கு பின்னால் முறுக்கி சாலையில் தள்ளிவிட்டு அவரை கைது செய்தார்.

காவல் அதிகாரி மாத்யூவின் இந்த மூர்க்கத்தனமான நடத்தை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிமம் இல்லாமல் கார் ஓட்டியது தொடர்பான விசாரணைக்கு வர மறுத்த கருப்பின பெண்ணும், காவல் அதிகாரியைத் தாக்கியதாக அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments