துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை...!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் அதில் ஒரு சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் எழுந்த புகாரின் பேரில் வருமான வரி துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டதாக தெரிகிறது.
மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டுள்ள நில விற்பனை தொடர்பான கோப்புகள் முறையாக உள்ளதா எனவும் பணப்பரிவர்த்தனை சரியான முறையில் நடைபெற்றுள்ளதா எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
Comments