அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் சாலை ஓரங்களில் அமர்ந்து படிக்கும் அவலம்...!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் சாலை ஓரங்களில் அமர்ந்து படிக்கும் நிலை இருந்து வருகிறது.
இப்பள்ளியில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு போதிய இட வசதி இல்லாமல் கடும் இடம் நெருக்கடியால் பள்ளியின் வெளியே உள்ள சாலையின் நடுவே காலை பிரார்த்தனையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் விளையாட்டு மைதானம், ஆய்வக வசதியும் இல்லாமல் இருப்பதால், கிராமப்புற பள்ளி மாணவர்கள் கருத்தில் கொண்டு அரசு உரிய வசதி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Comments