மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூக்கி சமூகத்தினருக்கு ராணுவ பாதுகாப்பு தரக்கோரியும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் என்.ஜி.ஓ. ஒன்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தின் நிலைமை முன்னேற்றம் அடைந்து வருவதாக விளக்கமளித்தார்.
உள்ளூர் காவலர்கள் தவிர, மணிப்பூர் ரைபிள்ஸ் படை, அதிரடிப்படை, ராணுவம் உள்ளிட்டோரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவற்றை கேட்டறிந்த நீதிபதிகள், வன்முறையால் வீடுகளை இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முகாம்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments