அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பலத்த மழை- வெள்ளம்... சாலை நடுவில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பலத்த மழை- வெள்ளம்... சாலை நடுவில் திடீரென ஏற்பட்ட பள்ளம்
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை ஒன்றின் நடுவில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சவுராஷ்ட்ராவின் கட்ச் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஜூனா கட் மாவட்டத்தில் பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க இந்திய விமானப் படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுத்ரெஜ் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி பல மணி நேரம் மின்கம்பத்தை பிடித்து தொங்கிய நிலையில் இரண்டு பேர் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்
Comments