செந்தில் பாலாஜியை நீக்கும் முடிவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகத் தகவல்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் முடிவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் முடிவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பல்வேறு ஊழல் வழக்குகளில் செந்தில் பாலாஜி குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டிருப்பதாகவும், அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி செந்தில் பாலாஜி விசாரணைக்கு தடை ஏற்படுத்தி வருவதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாகவும், அதுவரை தனது உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் தலையிட்டு ஆளுநருக்கு ஆலோசனை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments