காலிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானில் நடக்கும் மிகப் பெரிய சதி அம்பலம்..

காலிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்து நடக்கும் மிகப் பெரிய சதி அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் பல்வேறு மாநில காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தியாவில் உள்ள குற்றவாளிகளுக்கு எல்லை தாண்டி போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்கி வருவது தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்துடன், உலகெங்கிலும் உள்ள காலிஸ்தானிகள் மற்றும் கும்பல்களுக்கு நிதியளிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
எல்லைப் பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரோன்களின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மட்டுமின்றி ஆயுதங்களையும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ வழங்கி வருவதும் தெரியவந்துள்ளது.
Comments