திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசின் சம்மான் நிதி மூலம் ரூ.209 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது - எல்.முருகன்

திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசின் சம்மான் நிதி மூலம் இதுவரை 209 கோடி ரூபாய் அவர்களது வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
அவிநாசி அருகே சேவூர் ரோட்டில் நடைபெற்ற பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி உலக நாடுகள் போற்றக்கூடிய தலைவராக திகழ்ந்து வருகிறார் என்றும் எந்த நாட்டிற்கு சென்றாலும் அவருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.
Comments