சொத்துக்காக மாற்றுத்திறனாளியை மிருகத்தனமாக தாக்கும் உறவுக்காரப்பெண்..!

0 1090

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த மாற்றுத்திறனாளியை சொத்துக்காக வீட்டுக்கு அழைத்து வந்த உறவுக்காரப் பெண், அவரை கொடூரமாக அடித்துக் கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவூத்தன்பட்டியைச் சேர்ந்த சந்திரா என்ற இந்தப் பெண்ணுடைய கணவரின் அண்ணன் மகனான மணிகண்டன் என்பவர், நடக்கவோ, வாய் பேசவோ முடியாத, 38 வயது மாற்றுத்திறனாளி.

அரசு சார்பில் அவருக்கு மாதம்தோறும் வரும் உதவித் தொகையை பெற்றுக்கொள்ளவும் அவரது பெயரில் இருக்கும் இடம் ஒன்றை அபகரிக்கவும் சந்திரா திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

மணிகண்டனை சந்திரா அடித்து கொடுமைப்படுத்துவதை வீடியோவாக எடுத்த இளைஞர்கள் சிலர் அதனை காவல் நிலையத்தில் காண்பித்து புகாரளித்தனர். இதனையடுத்து சந்திரா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments