அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மாமியார், மருமகன் பலி.. மகள் கவலைக்கிடம்..!

0 22905

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய மாமியார், மருமகன் பலியான நிலையில் மகள் கவலைக்கிடமாக உள்ளார்.

மதுராந்தகம் பெருக்கரணையில் வசித்து வந்தவர் வசந்தா. இவரது மகள் அஞ்சலி மற்றும் மருமகன் சின்னத்தம்பி ஆகியோரும் இவருடன்  வசித்து வந்துள்ளனர்.

விறகு வெட்டு கூலித் தொழில் செய்து வந்த இவர்கள் மூவரும் நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் வசந்தாவும், சின்னதம்பியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மகள் அஞ்சலி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் அருந்தியது விஷ சாராயமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments