ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் பரவிய காட்டுத் தீயால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை யாகின.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாத முதியவர்கள் என்றும் கூறப்படுகிறது.
Sverdlovsk மாகாணத்திலும், சைபீரியாவின் Omsk மற்றும் டியூமென் மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்புகளில் தீ பரவியுள்ளது. ஏராளமான தீயணைப்பு வீரர்கள் கொளுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments