காலில் அடிப்பட்டதாக சிகிச்சைக்கு வந்து ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற கும்பல்..!

புதுச்சேரி அரியாங்குப்பம் சுகாதார மையத்தில் மருத்துவரின் ஸ்டெதஸ்கோப்பை திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இந்த சுகாதார மையத்திற்கு கடந்த 23 ஆம் தேதி இரவு ஒருவருக்கு காலில் அடிப்பட்டதாக கூறி 3 பேர் அழைத்து வந்து சிகிச்சை பெற்று சென்றனர்.
மறு நாள் பணிக்கு வந்த மருத்துவ அதிகாரி தரணி, தனது ஸ்டெதஸ்கோப்பை காணவில்லை என அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அரியாங்குப்பத்தை சேர்ந்த கவிராஜ், பிரகாஷ், பிரசாந்த், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Comments