ஏப்ரல் 22 ஆம் தேதி உலக பூமி நாளை முன்னிட்டு ஆடிப்பாடி கொண்டாடிய பெருவின் பழங்குடியின மக்கள்..!

இன்று உலக பூமி நாள் கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில், தென்னமெரிக்க நாடான பெருவில், இந்நாளை பழங்குடியின மக்கள் அவர்களது பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.
பூமியின் மாதிரியை செய்து அதற்கு அவர்களின் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் சங்கை ஊதியும், பாரம்பரிய வாத்தியங்கள் முழங்கியும், பாம்பை கையில் பிடித்துக் கொண்டு நடனமாடினர்.
மரம், செடி-கொடி, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
Comments