நடமாடும் கண் பரிசோதனை சேவை பிரிவு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்

"கண்ணொளி காப்போம்" திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நடமாடும் கண் பரிசோதனை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்காக இந்த வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் நீரிழிவு நோயால் ஏற்படும் கண் பாதிப்புகள், கண் புரை பாதிப்புகள் ஏற்படுவதால், முன்கூட்டியே அவற்றைக் கண்டறிய இந்த வாகனங்கள் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments