உக்ரைனிலுள்ள ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புடின் பயணம்

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களுக்கு அதிபர் விளாடிமிர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்தாண்டு மார்ச் மாதம், கெர்சன் நகரை கைப்பற்றிய ரஷ்ய படைகள் நவம்பர் மாதம் அங்கிருந்து பின்வாங்கத் தொடங்கின.
அங்கு அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்கு சென்ற புடின், கள நிலவரம் குறித்து படை தளபதிகளிடம் கேட்டறிந்தார். புடின் எப்போது அங்கு வந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Comments