கிளினிக்கை சேதப்படுத்தி மருத்துவரை தாக்கிய சம்பவம்.. மருத்துவரிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்.. கிளினிக்கை சீரமைத்து கொடுத்த பொதுமக்கள்..!

காரைக்கால் அருகே நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து கிளினிக்கை சேதப்படுத்தியதுடன், மருத்துவரையும் சரமாரி தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் மருத்துவரிடம் மன்னிப்பு கோரியதுடன், அப்பகுதி ஜமாத்தார் மற்றும் பொதுமக்கள் இணைந்து கிளினிக்-கை சீரமைத்து கொடுத்தனர்.
சம்பவத்தன்று அம்பகரத்தூரில் கிளினிக்-கில் இருந்த ஞானமணியை, அங்குவந்த மர்மநபர்கள் சரமாரி தாக்கியதுடன், கிளினிக்-கையும் சேதப்படுத்திச் சென்றனர்.
புகாரின் பேரின் 30 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சில இளைஞர்களை அப்பகுதி ஜமாத்தார் தங்களது பள்ளிவாசலில் வைத்து விசாரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
Comments