ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வழக்கு - மோசடித் தொகை ரூ.2000 கோடிக்கு மேல் என்பதால் களமிறங்கியுள்ள அமலாக்கத்துறை..!

0 1093

பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று பெருமளவில் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா மற்றும் ஹிஜாவூ நிறுவனங்களின் வழக்கு விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடமிருந்து பெற்று அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ், ஹிஜாவூ நிறுவனங்கள் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதால் இதில் அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது.

இதனிடையே ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகர் ஹரிகரன், 231 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதில் 10 கோடி ரூபாயை செலவு செய்து, உல்லாசமாக இருந்ததாக் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

மீதமுள்ள தொகையை சொத்துகளாக எங்கெங்கு வைத்துள்ளான் என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments