''முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகம் 130 கி.மீ.ஆக அதிகரிப்பு...'' - தெற்கு ரயில்வே..!

சென்னை-ரேணிகுண்டா, அரக்கோணம்-ஜோலார்பேட்டை, சென்னை-கூடுர் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டரிலிருந்து 130 கிலோ மீட்டராக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது.
ரயில்களின் வேகத்தை அதிகரித்து இயக்கும் வகையில் 2037கிலோ மீட்டர் தூர வழித்தடம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 1445 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
மேலும் சென்னை-பெங்களுரு சதாப்தி ரயில் வழித்தடம் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பிரதமர் நாளை தொடங்கி வைக்கும் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும், இதனால் பயண நேரம் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மிச்சமாகும் என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
Comments