இந்திய விண்வெளிக் கொள்கை 2023க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

இந்திய விண்வெளிக் கொள்கை 2023க்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,இத்துறையில் தனியார் பங்களிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பு , மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த இஸ்ரோவுக்கு உதவும்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் உருவாக்குதல், தரவு சேகரிப்பு மற்றும் பரப்புதல் உள்ளிட்ட விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் துறை பங்கேற்க அரசு அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Comments