பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, சென்னையில் 22,000 போலீசார் பாதுகாப்பு..!

பிரதமர் மோடி நாளை மறுதினம் சென்னை வருவதையொட்டி, சென்னை மற்றும் தாம்பரம் நகர பகுதிகளில் 26 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம் திறப்பு விழா, சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் துவக்க விழா மற்றும் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் சென்னை வருகிறார்.
இதனையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆளுநர் மாளிகை, விவேகானந்தர் இல்லம், பொதுக்கூட்டம் நடைபெறும் பல்லாவரம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 22 ஆயிரம் போலீசாரும், தாம்பரம் நகர பகுதியில் 4 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பல்லாவரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 8ஆம் தேதியும், தாம்பரம் மாநகர பகுதியில் 9ம் தேதி வரையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments